தூய்மை காவலர்கள் தமிழக அரசுக்கு நன்றி

விருதுநகர், பிப்.5: தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் ஊதியத்தை 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தது. இதற்கென ஆண்டுக்கு 476 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில், தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிய தமிழக அரசை பாராட்டி விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் வைத்து மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஏஐடியுசி ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி, ஏஐடியுசி மாநில குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். முடிவில், தமிழக அரசின் இந்தச் செயலை பட்டி தொட்டி எல்லாம் பரப்புவோம் என்ற உறுதிமொழி ஏற்றனர்.

 

Related Stories: