டெல்லி: துணை வேந்தர்கள் நியமனச் சட்டத்திற்கு எதிரான வழக்கை 6 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கான உரிய அமர்வை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமைக்க வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை புதிய நியமனங்கள் செய்யமாட்டோம் என்ற தமிழ்நாடு அரசின் உறுதிமொழியையும் பதிவு செய்கிறோம். உயர் நீதிமன்ற அமர்வு இவ்வழக்கில் கூறிய கருத்துக்களையும் ரத்து செய்கிறோம் என்று கூறியுள்ளது.
