டெல்லி; தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அடங்கிய விடுமுறை நீதிமன்ற அமர்வு இடைக்கால தடை விதித்தது. ஆளுநருக்கு பதில் தமிழ்நாடு அரசே பல்கலை. துணைவேந்தர்களை நியமிக்க சட்டம் இயற்றியது தமிழ்நாடு அரசு. அரசின் சட்டத்துக்கு எதிராக நெல்லையில் இருந்து சென்னை ஐகோர்ட்டில் மனுதாரர் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்தாண்டு மே மாதம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு அரசின் சட்டத்திற்கு தடை விதித்திருந்தனர்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டனர். மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் கொடுக்கப்படவில்லை. தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே விடுமுறை கால அமர்வு தீர்ப்பளித்தது. வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றவுள்ளதாக மனு தாக்கல் செய்த பிறகும் அதனை ஐகோர்ட் கவனத்தில் கொள்ளவில்லை. மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விடுமுறை கால அமர்வு விசாரித்திருக்க கூடாது.
நீதிமன்ற நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் மீறியுள்ளது. வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றவுள்ளதாக மனு தாக்கல் செய்த பிறகும் அதனை ஐகோர்ட் கவனத்தில் கொள்ளவில்லை என்று வாதிட்டனர். தொடர்ந்து விடுமுறைகால அமர்வில் வழக்கை அவசர அவசரமாக வழக்கை விசாரித்தது ஏன்? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி; துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்தார்.
துணை வேந்தர்கள் நியமனச் சட்டத்திற்கு எதிரான வழக்கை 6 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். இதற்கான உரிய அமர்வை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமைக்க வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை புதிய நியமனங்கள் செய்யமாட்டோம் என்ற தமிழ்நாடு அரசின் உறுதிமொழியையும் பதிவு செய்கிறோம். உயர் நீதிமன்ற அமர்வு இவ்வழக்கில் கூறிய கருத்துக்களையும் ரத்து செய்கிறோம் என்று கூறியுள்ளார்.
