பிட்ஸ்

* பிபிசி பரிந்துரை பட்டியலில் மந்தனா, திவ்யா தேஷ்முக்
புதுடெல்லி: பிபிசி விளையாட்டு விருதுகள் பெறுவதற்கு பரிந்துரை செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில், மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக், பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சுருச்சி சிங், தடகள வீராங்கனை ஜோதி யர்ராஜி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2025ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி பெற்று, இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக, ஹர்மன்பிரித் கவுரும், ஸ்மிருதி மந்தனாவும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

* 60,000 நிமிடங்கள் லெப்ரான் சாதனை
வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த கூடைப் பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (41), கூடைப்பந்து போட்டிகள் வரலாற்றில் முதல் முறையாக, 60 ஆயிரம் நிமிடங்கள் ஆடிய வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளார். கேவலியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லேகர்ஸ் அணிக்காக ஆடிய லெப்ரான், போட்டியின் 24வது நிமிடத்தில் 60,000 நிமிடங்களை எட்டி சாதனை படைத்தார். அப்போட்டியில் லேகர்ஸ் அணி 129-99 என்ற கணக்கில் தோல்வியை தழுவியபோதும், லெப்ரானின் சாதனை எளிதில் முறியடிக்கப்படாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்த சாதனைப்பட்டியலில் கரீம் அப்துல் ஜப்பார் 57,446 நிமிடங்கள் ஆட்டத்துடன் 2ம் இடத்தில் உள்ளார்.

Related Stories: