கறம்பக்குடி ஜன.30: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் வேளாண் வட்டாரத்தில் செங்கமேடு ஊராட்சி அமைந்துள்ளது. செங்கமேடு ஊராட்சியில் பத்து தாக்கு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, நெல் நடவு பணியில் ஈடுபட்டு அறுவடை செய்வது வழக்கம். பின்னர், அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் சேர்ப்பது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் பத்து தாக்கு கிராமத்தில் அனைத்து விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. கிராம விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று அந்த கொள்முதல் நிலையத்தை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, கறம்பக்குடி அட்மா கமிட்டி தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த திறப்பு விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
