புதிய அரசு அமைக்க எதிர்ப்பு மணிப்பூரில் மாணவர்கள் பேரணி

சூரசந்த்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் புதிய அரசு அமைக்கும் முயற்சியை கண்டித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினார்கள். மணிப்பூரில் கடந்த ஆண்டு முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்த பின் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மணிப்பூரில் புதிய அரசு அமைக்கும் முயற்சியை கண்டித்து நேற்று மாணவர்கள் பேரணி நடத்தப்பட்டது.

குகி-சோ கூட்டு மாணவர் அமைப்பின் மூலமாக நடத்தப்பட்ட இந்த பேரணி சூரசந்த்பூரின் மாவட்ட தலைமையகத்தில் உள்ள லாம்கா பொது மைதானத்தில் தொடங்கி, துய்போங்கில் முடிவடைந்தது. இந்த பேரணியில் அரசியல் தீர்வு வேண்டும், புதிய அரசு வேண்டாம் என்ற முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினார்கள். பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை கூடுதல் துணை ஆணையரிடம் மாணவர் தலைவர்கள் சமர்ப்பித்தனர். இதில் மணிப்பூரில் புதிய அரசு அமைப்பதற்கு முன்பு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

Related Stories: