தேவையான பொருட்கள்:
* 1 கப் துளசி இலைகள்
* 8 பல் பூண்டு
* 4 பச்சை மிளகாய்கள்
* 1 தக்காளி கழுவி
* 1 வெங்காயம் (சிறியது)
* 2 பாதாம் பருப்புகள்
* 1 தேக்கரண்டி தூள் உப்பு
செய்முறை:
* முதலில் 1 கப் துளசி இலைகளை எடுத்து சுத்தமான நீரில் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஒரு சுத்தமான மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளவும். அதில் துளசி இலைகளை போடவேண்டும்.
* பின்னர், தோலுரிக்கப்பட்ட பூண்டை 8 முதல் 10 பற்களையும், இரு துண்டுகளாக நறுக்கிய 4 பச்சை மிளகாய்களையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.
* அதன் பிறகு மிக்சியில் 2 முதல் 4 துண்டுகளாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்க்க வேண்டும்.
அதனுடன் சிறிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயங்களை சேர்க்க வேண்டும்.
* பிறகு, அதில் ஊறவைத்த 2 பாதம் துண்டுகளையும் சேர்க்க வேண்டும்.
* இவைற்றை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த விழுதினை பதம் சிறிது திப்பி திப்பியாக இருக்க வேண்டும். அரைத்த விழுதினை ஒரு கிண்ணத்திற்கு மாற்ற வேண்டும்.
* பிறகு, தாளிப்பு கரண்டியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் சிறிதளவு கடுகு, உடைத்த உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்க வேண்டும்.
* சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி சட்னி தயார்.
