வெங்காய ஊறுகாய்

தேவையானவை:

சின்ன வெங்காயம் – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 5
புளி – நெல்லிக்காய் அளவு
தனியா – 2 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின் வதக்கிய வெங்காயத்துடன் புளி, காய்ந்த மிளகாய், தனியா, உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி, ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு தாளித்து அரைத்து சேர்த்துக் கிளறி, எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான வெங்காய ஊறுகாய் ரெடி!

Related Stories: