ஆரோக்கியம் தரும் 3 வகை சிறுதானிய கேக்!

கேழ்வரகு கேக் (Ragi Cake)

தேவையானவை

கேழ்வரகு மாவு – 1 கப்
வெல்லம் – ¾ கப் (கரைத்தது)
பால் / தேங்காய்ப்பால் – 1 கப்
எண்ணெய் – ¼ கப்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – ½ டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்.

செய்முறை

அனைத்து உலர் பொருட்களையும் கலந்து கொள்ளவும். வெல்லம் கரைசல், பால், எண்ணெய் சேர்த்து மென்மையான கலவையாக மாற்றவும். இந்தக் கலவையை அப்படியே ஓவனில் அல்லது குக்கரில் வைக்கவும்.

தினை கேக் (Foxtail Millet Cake)

தேவையானவை

தினை மாவு – 1 கப்
நாட்டுச் சர்க்கரை – ¾ கப்
முட்டை – 2 (வெஜ் வேண்டுமெனில் தயிர் ½ கப்)
பால் – ½ கப்
எண்ணெய் – ¼ கப்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்.

செய்முறை

முட்டையை நன்றாக அடித்து, மற்ற பொருட்களுடன் கலந்து வேகவைக்கவும். இது பஞ்சு போல் மென்மையான கேக்குகளாகக் கிடைக்கும்.

இந்தக் கேக்குகள் மேல் வேண்டுமானால் வெனிலா, சாக்லேட், பட்டர் ஸ்காட்ச் உள்ளிட்ட கிரீம்கள் தடவி, க்ரீம் கேக்குகளாகவும் கொடுக்கலாம். அதே போல் கேக் பேக் செய்ய 170°C ஏர்ஃப்ரையில் (சில ஏர்ஃப்ரையரில் பேக்கிங் ஆப்ஷன் இருக்கும்) வைக்கலாம், 170 டிகிரி சூடேற்றிய மைக்ரோவேவ் ஓவனில் 35-40 நிமிடம் மற்றும் குக்கரில் 45 நிமிடம் பேக் செய்யலாம். குக்கர் முறைக்கான குறிப்பு குக்கரில் உப்பு அல்லது மணல் போட்டு 10 நிமிடம் சூடாக்கி, பின்னர் கேக் பாத்திரத்தை வைத்து விசில் இல்லாமல் மிதமான தீயில் வேகவைக்கவும். ஒருவேளை உப்பு சுவை கேக்கில் ஏறிவிடும் என நினைப்போர் மணல் பயன்படுத்தலாம். தற்போது குக்கர் பேக் மணல் என்றே சில கடைகளில் விற்பனைக்கு உள்ளன. இவை பலமுறை பயன்படுத்தும்படி உள்ளன.

வரகு கேக் (Kodo Millet Cake)

தேவையானவை

வரகு மாவு – 1 கப்
வெல்லம் – ¾ கப்
தேங்காய்ப்பால் – 1 கப்
நெய் – ¼ கப்
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்.

செய்முறை

மேலே கொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களை நன்கு கலந்து கேக் டிரேயில் கொட்டி அவன் அல்லது குக்கரில் வைக்கவும்.