வாழை இலை கோவா பொங்கல்

தேவையான பொருட்கள்

பச்சரிசி 1 கப்
பாசிப்பருப்பு ¼ கப்
வெல்லம் (பொடியாக்கியது) 1½ கப்
தண்ணீர் தேவையான அளவு
பிரெஷ் கோவா – 1 கப்
நெய் 34 மேசைக்கரண்டி
முந்திரி 1012 (நறுக்கியது)
திராட்சை 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி ½ டீஸ்பூன்
சுக்குப் பொடி ஒரு சிட்டிகை (விருப்பம்)
இளம் வாழை இலை – 1
உப்பு ஒரு சிட்டிகை.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை லேசாக வாசனை வரும் வரை வறுக்கவும். அதில் பச்சரிசி சேர்த்து ஒரு முறை கலக்கவும். வாழை இலையை அரைத்து வடிகட்டி பாத்திரத்தில் ஊற்றவும். அதில் அரிசி, பருப்பு நன்கு மென்மையாக வேகும் வரை சமைக்கவும். தேவையான தண்ணீர் ஊற்றவும். (பிரஷர் குக்கரில் 3 விசில் போதும்) தனி பாத்திரத்தில் வெல்லம் + சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி காய்ச்சி, பாகு பதத்திற்கு முன்பே எடுக்கவும். அரிசி, பருப்பு வெந்ததும் காய்ச்சிய வெல்லத்தை மிதமான தீயில் 57 நிமிடம் நன்கு கலக்கவும். பிரெஷ் கோவாவில் நெய் சேர்த்து கலந்து பொங்கலில் சேர்க்கவும். ஒரு சிறிய கடாயில் நெய் காய வைத்து முந்திரி, திராட்சை பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்க்கவும். ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும். மேலே சிறிது நெய் ஊற்றி சூடாக பரிமாறவும். வாழை இலை கோவா பொங்கல் தயார்.
– ஹேமலதா வாசுதேவன்

Related Stories: