சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசும் “Unity” தான் இந்தியாவின் பலம் என ABVP- க்கு திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்றொரு பழமொழி இருக்கிறது. அதுபோலத்தான் கலவரக்கார புத்திகொண்ட பாசிச பாஜகவுக்குத் தெரியாது வேற்றுமையில்தான் இந்தியாவின் ஒற்றுமை இருக்கிறது என்று… அண்ணல் காந்தியும், அண்ணல் அம்பேத்கரும் “We the People of India” என்று மொழியால், கலாசாரத்தால், மதத்தால் வேறுபட்ட இந்தியர்களை “Unity” என்ற உணர்வில் ஒன்று சேர்த்தார்கள்…
Uniformity என்ற பெயரில் ஒரே உணவு, ஒரே உடை, ஒரே மொழி, ஒரே மதம் என இந்தியாவின் பன்முகத்தன்மையில் கல்லெறிந்து இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்கப்பார்க்கும் கலவரபுத்திகொண்ட பாஜகவுக்குத் தெரியாது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் “Unity” தான் இந்தியாவின் பலம் என்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
