விவசாயிகள் கோரிக்கையை ஏற்று களக்காடு தாமரைகுளம் கால்வாய் கரை சாலை

*ரூபி மனோகரன் எம்எல்ஏ நேரில் ஆய்வு

நெல்லை : விவசாயிகள் கோரிக்கையை ஏற்று களக்காடு தாமரைகுளம் கால்வாய் கரை வழியாக விவசாய இடுபொருட்கள் எடுத்துச் செல்ல சாலை அமைப்பது குறித்து நாங்குநேரி ரூபி மனோகரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

களக்காடு நகராட்சி, கீழபத்தை பெரியகுளம், தாமரை குளத்திற்கு நீர் செல்லும் கால்வாய் கரை வழியாக விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் விவசாய உபகரணங்கள், இடுபொருட்கள் வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கு வசதியாக சாலை அமைத்துத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து அந்த இடத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் இது குறித்து உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து விரைந்து சாலை அமைத்துத் தருவதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.

நிகழ்வில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை, முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், களக்காடு நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பாளை. மேற்கு கணேசன், பாளை. தெற்கு நளன், பாளை. கிழக்கு சங்கரபாண்டி, மூலைக்கரைப்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன், மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: