*சுகாதார சீர்கேடு அபாயத்தால் பீதி
அரூர் : கம்பைநல்லூர் -மொரப்பூர் சாலையில் பூமிசமுத்திரம் தனியார் பள்ளி முன் சாலையோரத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு பயன்படுத்திய ஊசி, மருந்து பாட்டில்கள், காயங்களுக்கு கட்டி பயன்படுத்திய பஞ்சு, துணி உள்ளிட்டவற்றை தனித்தனியாக பிரித்து, முறையான மூடியிட்ட முறையில் பெட்களில் போட்டு, மருத்துவ கழிவுகள் சேகரிப்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மருத்துவ கழிவுகளை திறந்தவெளியில் சாலையோரம், நீர்நிலைகளில் கொட்டினால் சட்டப்படடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், கம்பைநல்லூரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, பள்ளி முன்புறம் சாலையோரம் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. விதிமுறை மீறி மருத்துவ கழிவுகள் கொட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பாக கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
