திருத்துறைப்பூண்டி,ஜன.28: திருத்துறைப்பூண்டி பெரிய கோயிலில் சமத்துவ விருந்து நடந்தது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார விழா 24ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் (பெரிய கோயில்) சமத்துவ விருந்து நேற்று முன்தினம் நடைபெற்றது, இதில் துணை ஆட்சியர் அமுதா, ஆடிஓ யோகேஸ்வரன், வட்டாட்சியர் செந்தில்குமார், நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், செயல் அலுவலர் முருகையன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
