திருத்துறைப்பூண்டி,ஜன.28: திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் சிறப்பாக பணியாற்றும் இன்ஸ்பெக்டர் கழனியப்பனுக்கு பாராட்டு சான்றிதைா கலெக்டர் மோகனச்சந்திரன் வழங்கினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்,
சட்டம் ஒழுங்கு போன்ற பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்க்காக நற்சான்றிதழை திருவாரூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் இன்ஸ்பெக்டர் கழனியப்பன்யிடம் வழங்கினார். அப்போது மாவட்ட எஸ்பி கருண்கரட் உடன் இருந்தனர், நற்சான்றிதழ் பெற்ற இன்ஸ்பெக்டர் கழனியப்பனை காவலர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.
