மாஜி பிஎஸ்என்எல் ஊழியர் சாவு

ஈரோடு, ஜன. 28: ஈரோட்டில் பஸ்சில் மயங்கிய ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் உயிரிழந்தார்.
ஈரோடு கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (66). இவர் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். இவர், கடந்த 26ம் தேதி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சென்று விட்டு, பின்னர், அங்கிருந்து பஸ்சில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வந்தார். பின்னர், வீட்டிற்கு செல்வதற்காக தனியார் டவுன் பஸ்சில் ஏறினார்.

பஸ் புறப்பட்ட சிறுது நேரத்தில் ரவிச்சந்திரன் மயக்கம் அடைந்தார். இதைப்பார்த்த கண்டக்டர், ரவிச்சந்திரனை பஸ்சிலேயே ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு ரவிச்சந்திரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: