கலசபாக்கம், ஜன. 28: மங்கலம் கிராமத்தில் நடந்த தை கிருத்திகை விழாவில் கொதிக்கும் எண்ணெய்யில் பக்தர்கள் கையால் வடை சுட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் தை கிருத்திகையொட்டி பாலமுருகன் கோயிலில் தை கிருத்திகை 53ம் ஆண்டு தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆண்டுதோறும் தை கிருத்திகை முன்னிட்டு தேர் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தை கிருத்திகை முன்னிட்டு காலையில் பால் அபிஷேக ஊர்வலம் அதைத்தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருந்து முருக பக்தரால் கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை சுட்டு எடுத்தல், மரத்தால் செக்கு இழுத்தல், அறிக்கை வேல் ஊர்வலம், நடனமாடி காவடி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலம் மற்றும் பூந்தேர் இழுத்தனர். இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதைதொடர்ந்து வள்ளி திருமணம் வானவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை சுட்ட பக்தர்கள் மங்கலம் கிராமத்தில் தை கிருத்திகை விழா
- தாய் கிரிதிகை திருவிழா
- மங்களம் கிராமம்
- கலசபாக்கம்
- தாய் கிருத்திகை
- பாலமுருகன்
- திருவண்ணாமலை மாவட்டம்
- தாய் கிருத்திகை…
