நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக முட்டை விலையில் தலா 5 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 520 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாட்டின் பிற மண்டலங்களில், கடந்த 4 நாட்களாக முட்டை விலை உயர்த்தப்பட்டு வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முட்டை விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
