வார இறுதி நாளிலும் காலை, மாலை என அதிரடி; ரூ.1.18 லட்சத்தை தொட்டது தங்கம்: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் எகிறியது

சென்னை: தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று காலை, மாலை என ஒரே நாளில் ரூ.1600 உயர்ந்து பவுன் ரூ.1.18 லட்சத்தை தொட்டது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் எகிறியது. வார இறுதிநாளான நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,620க்கும், பவுனுக்கு ரூ. 560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1,16,960க்கு விற்பனையானது. இதேபோல வெள்ளி விலையும் அதிகரித்தது.

வெள்ளி காலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.355க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, பார் வெள்ளி ரூ.3,55,000க்கும் விற்பனையானது. இந்த நிலையில் பிற்பகலில் மேலும் தங்கம் விலை உயர்ந்தது. பிற்பகலில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14750க்கும், பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து விற்பனையானது.

இதன் மூலம் நேற்று காலை, மாலை என ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்தது. அதேபோல வெள்ளி விலையும் பிற்பகலில் அதிகரித்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.365க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து பார் வெள்ளி 3 லட்சத்து 65 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் நேற்று காலை, மாலை என கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் அதிகரித்தது. இந்த விலை உயர்வுக்கு சர்வதேச முதலீட்டாளர்களும், பல நாடுகள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருவது தான் என்று கூறப்படுகிறது.

Related Stories: