தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

தர்மபுரி, ஜன.26: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தர்மபுரியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தர்மபுரி நகர பஸ் நிலையத்தில், 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையெழுத்து இயக்கம் நடந்தது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் சதீஸ், கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார். மேலும், வாக்களிப்பதின் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரசார வாகனத்தை கலெக்டர் சதீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, அனைத்து சிலிண்டர்களில், வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை கலெக்டர் சதீஸ் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர், ஆட்டோ மூலம் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கத்தை கலெக்டர் பார்வையிட்டார். மேலும், தர்மபுரி நகர பஸ் நிலையத்தில், ஆட்டோக்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை கலெக்டர் ஒட்டினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, நகராட்சி ஆணையர் சேகர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ், தேர்தல் தாசில்தார் அன்பு உள்ளிட்ட தொடர்புடை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: