முத்துப்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம் 21 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு

முத்துப்பேட்டை,ஜன.26: முத்துப்பேட்டையில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 21 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் தலைவர் பாலசந்திரன் தலைமையில் நடைபெற்றது. நடுப்பனை ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார். இதில் மருத்துவக்குழுவினரால் கண் சம்பந்தப்பட்ட அனைத்து குறைபாடுகளுக்கும் சோதனை செய்யப்பட்டது.

இதில் நூறுக்கும் மேற்ப்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு கண் அறுவை சிகிச்சைக்கு 21 பேர் தேர்வு செய்யப்பட்டு கோயம்புத்தூர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த முகாமில் செயலாளர் அந்தோணிராஜா, பொருளாளர் ராஜசேகர், முன்னாள் தலைவர்கள் கோவி.ரெங்கசாமி, ராஜ்மோகன், சாகுல் ஹமீது, கண்ணதாசன், , ராமமூர்த்தி, தலைவர் தேர்வு அமிர்தா தியாகராஜன், நிர்வாகிகள் மகாலிங்கம் மற்றும் ராம்மோகன், ராஜீவ்காந்தி உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

 

Related Stories: