முத்துப்பேட்டை,ஜன.26: முத்துப்பேட்டையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. முத்துப்பேட்டை வருவாய்த்துறை சார்பில் நேற்று 16-வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மன்னார்குடி கோட்டாட்சியர் மநகஸ்வரன் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து வாக்காளர் வழிப்புணர்வு பேரணி மன்னார்குடி சாலை, குமரன் பஜார், பழைய பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய போஸ்டாபீஸ் சாலை வழியாக முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே சென்று அடைந்தது. விழிப்புணர்வு பேரணி நெடுவெங்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
பின்னர் மூத்த வாக்காளர்கள் கவுரவிக்கப்பட்டனர், தொடர்ந்து அனைவரும் கட்டாயம் வாக்களிப்போம் எனவும் தேசிய வாக்காளர் தின உறுதி மொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் மண்டல துணை வட்டாட்சியர் தங்கதுரை, சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் சிவக்குமார், தலைமையிட்டது துணை வட்டாட்சியர் வெங்கட்ராமன், தேர்தல் துணை வட்டாட்சியர் புனிதா, வருவாய் ஆய்வாளர்கள் மகாலட்சுமி, சேக்தாவூது, மற்றும், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
