இடைப்பாடி சுற்றுப்பகுதியில் ஒரு லட்சம் பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை

இடைப்பாடி, ஜன.29: இடைப்பாடியை சுற்றியுள்ள  நாச்சூர், ஆலச்சம்பாளையம், மேட்டு தெரு, வெள்ளாண்டி வலசு, கவுண்டம்பட்டி தாவா தெரு, காட்டூர் ஆகிய பகுதியில் இருந்து, பக்தர்கள் தை மாதம் பழனி மலைக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இதையொட்டி கடந்த 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை, தினமும் ஒவ்வொரு பகுதியில் இருந்து காவடிகள் ஆடி வருகின்றனர். இதை வரவேற்கும் வகையில், காய்கறிகள், பழவகைகள் கொண்டு பழனி மலை போல அமைக்கப்பட்டுள்ளது.  நேற்று அங்காளம்மன் கோயில் தெருவில் சின்ன மாரியம்மன் காவடி அலங்காரம் குழு சார்பில், ஈஸ்வரன், ஈஸ்வரி, மாரியம்மன், முருகன் விநாயகர் உள்ளிட்ட சுவாமி அவதாரங்களை அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்தனர். இப்பகுதியை சுற்றி வெள்ளூற்று பெருமாள் கோயில், பள்ளிபாளையம், ஈரோடு காங்கயம், தாராபுரம், அமராந்தி, பாலாறு பழனிமலை என 30ம் தேதி முதல் 4ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பக்தர்கள் பழனி மலைக்கு பாதயாத்திரையாக நடந்து செல்கின்றர்.

Related Stories: