சென்னை: விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவை அடுத்து இண்டிகோ 700 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. டி.ஜி.சி.ஏ. உத்தரவை தொடர்ந்து 717 உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் காலி செய்துள்ளது. ரத்தான 717 சேவைகளில் 364, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத்தை இணைப்பவை. இண்டிகோ நிறுவனத்தால் கைவிடப்பட்ட விமான சேவைகள் 2026 ஜனவரி-மார்ச் காலத்துக்கு உட்பட்டது. இண்டிகோ கைவிட்ட உள்நாட்டு சேவைகளை பெற மற்ற விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
2025ல் இண்டிகோ சேவையில் ஏற்பட்ட குளறுபடியால் ஒன்றிய அரசு, குளிர்காலத்தில் 10% அளவுக்கு சேவைகளை ரத்து செய்தது. தினமும் 2022 விமான சேவைகளை வழங்கிய இண்டிகோ, அரசின் உத்தரவை தொடர்ந்து 1,930ஆக குறைத்தது. கடந்த டிசம்பர்.3 முதல் 5ம் தேதி வரை இண்டிகோ 2,507 விமான சேவைகளை ரத்து செய்தது, 1,858 விமான சேவைகள். 3 லட்சத்துக்கும் அதிகமான விமான பயணிகள் இண்டிகோ சேவை குளறுபடியால் 2025 டிசம்பரில் பாதிக்கப்பட்டனர்.
