பொதுமக்களிடம் பல்வேறு மோசடிகளில் பறித்த ரூ.100 கோடியை கிரிப்டோ கரன்சியாக மாற்றிய சர்வதேச கும்பல் அதிரடி கைது: மாநில இணையவழி குற்றப்பிரிவு நடவடிக்கை

 

சென்னை: ராமநாதபுரத்தை தலைமையிடமாக ெகாண்டு, கடந்த ஓராண்டில் பொதுமக்களிடம் பல்வேறு மோசடிகளில் பறித்த ரூ.100 கோடி பணத்தை, கிரிப்டோ கரன்சியாக மாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பிய 7 சர்வதேச சைபர் குற்றவாளிகளை மாநில இணையவழி குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

செல்போனை அதிகமாக பயன்படுத்தும் பொதுமக்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் போலியான முதலீட்டு திட்டங்கள் மற்றும் மோசடியான வேலைவாய்ப்பு இணையதளங்கள், போதை பொருள் கடத்தியதாக டிஜிட்டல் கைது, கிரிப்டோ கரன்சி மோசடி என பொதுமக்களிடம் சைபர் குற்றவாளிகள் ஓடிபி மூலம் அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துவிடுகின்றனர். இதுபோன்ற மோசடிகள் குறித்து மாநில இணையவழி குற்றப்பிரிவுக்கு அதிகளவில் புகார்கள் வந்துள்ளது. குறிப்பாக கிரிப்டோ கரன்சி ெதாடர்பாக புகார்கள் அதிகமாக வந்துள்ளது.

இதனால் மாநில இணையவழி குற்றப்பிரிவு எஸ்பி ஷஹ்நாஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையின் தீவிர வேட்டையில், சர்வதேச சைபர் குற்றவாளிகள் பலர் தமிழகத்தில் இருந்து செயல்பட்டு வந்தது தெரியவந்தது. உடனே அவர்களை பிடிக்கும் பணியில் எஸ்பி ஷஹ்நாஸ் குழுவினர் நவீன தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை நடத்திய போது, ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி மற்றும் பரக்குடி பகுதியில் கால் சென்டர் போல் சர்வதேச சைபர் மோசடி கும்பல் இயங்கியது தெரியவந்தது.

அதைதொடர்ந்து தனிப்படையினர் அதிரடியாக அப்பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வெளிநாட்டு சைபர் குற்றவாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த சர்வதேச குற்றவாளிகள் 7 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வங்கி ஆவணங்கள் மற்றும் மோசடி தொடர்பான போலியான இணையதள முகவரிகள் அனைத்து பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய போது, கடந்த 2025-26ம் ஆண்டில் இந்த 7 பேர் கொண்டு கும்பல் பொதுமக்களிடம் பல்வேறு வகையில் ரூ.100 கோடி வரை பறித்தது தெரியவந்தது. அந்த பணத்தை மோசடி நபர்கள் கிரிப்டோ கரன்சியாக மாற்றி அதை சர்வதேச சைபர் குற்றவாகிகள் கட்டுப்பாட்டில் உள்ள வாலட்டுகளுக்கு மாற்றியதும் தெரியவந்தது.

இவர்கள் 7 பேரும் வெளிநாட்டு சர்வதேச சைபர் குற்றவாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்து மோசடி பணத்தில் குறிப்பிட்ட சதவீதம் கமிஷனாக பெற்று தொடர் மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது. தற்போது கைது செய்யப்பட்ட 7 பேர் சர்வதேச குற்றவாளிகள் என்பதால் தமிழகத்தில் இவர்கள் முகாம் அமைக்க யார் யார் துணை இருந்தனர். இவர்கள் பின்னணி என்ன என்பது தொடர்பாக மாநில இணையவழி குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: