×

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் -ஐகோர்ட்டில் அரசு உறுதி

சென்னை : தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ஐகோர்ட்டில் அரசு உறுதி அளித்துள்ளது. 28 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் 3 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் பாதி அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் இனி அவகாசம் வழங்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags : Tasmak ,Tamil Nadu ,Chennai ,iCourt ,
× RELATED கடலூர் பகுதியில் சொட்டு நீர் பாசனம் முறையில் வாழை, மணிலா பயிர் சாகுபடி