கோபால்பட்டி, ஜன. 24: சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் ஆண்டுதோறும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு பிப்.6ம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக பிப்.5ம் தேதி இரவு 11 மணிக்கு மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன் புனித அந்தோணியார் தேர் பவனி நடைபெறும்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டையொட்டி வாடிவாசல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி பூமி பூஜை செய்து வாடிவாசல் அமைக்கும் பணியை துவக்கி வைத்தனர். இதில் ஊர் மணியம் டேவிட் இருதயசாமி, நாட்டாமை ராயப்பன், மேனேஜர் ஜான் பீட்டர் சூசைராஜ், கோல்கார் செபஸ்தியார், சாணார்பட்டி திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ஜான் பீட்டர், அதிமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணை செயலாளர் அந்தோணி மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
