சாத்தூர், ஜன.24: திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி துவக்கி வைத்த அம்ரித் பாரத் ரயில் சாத்தூர் வந்தடைந்தது. சாத்தூரில் பயணிகள் மலர்தூவி வரவேற்றனர். தென்னக ரயில்வேயில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு புதிய வாராந்திர அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருவனந்தபுரத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் நேற்று மதியம் சாத்தூர் வந்தடைந்தது. ரயிலை பயணிகள், ரயில்வே அலுவலர்கள், பணியாளர்கள் பூக்கள் தூவி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாத், சாத்தூர் ரயில் நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
