சாத்தூர், ஜன.24: சாத்தூரில் பள்ளி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி சென்றனர். சாத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் கனகராஜ் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
அதை தொடர்ந்து நடந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் கனகராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து ஆரம்பித்து முக்ராந்தல் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முடிவடைந்தது. நிகழ்ச்சியில் சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் ராஜாமணி, நகராட்சி ஆணையர் ஜெகதீஸ்வரி, தனி துணை வட்டாட்சியர் (தேர்தல்) மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
