திருத்துறைப்பூண்டி அருகே சேதமடைந்த மரப்பாலத்தை கடக்கும் மக்கள்

திருத்துறைப்பூண்டி, ஜன. 24: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பள்ளங்கோயில் கோட்டகம் முள்ளியாற்றில் குறுக்கே போடப்பட்ட மரப்பாலம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேதமடைந்துள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், முதியவர்கள் பொதுமக்கள் முள்ளியாற்றைக் கடந்து தான் மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி போன்ற மார்க்கம் வழியாக முக்கிய ஊர்களுக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் மரப்பாலம் சேதமடைந்த நிலையில் முள்ளியாற்றைக் கடந்து செல்ல பள்ளி மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பயந்து உயிர் பயத்தில் கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சேதமடைந்த பாலத்தை சீரமைத்து தரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Related Stories: