நீடாமங்கலம், ஜன. 24: கொரடாச்சேரி அருகே நெருப்பில் தவறி விழுந்து சிறுமி இறந்தார். திருவாரூர் அருகிலுள்ள இலங்கைச்சேரியைச் சேர்ந்தவர் சந்திரன் (35). விவசாயி. இவருக்கு வர்ஷித் (1.1/2) என்ற மகள் உள்ளார். சந்திரன் கொரடாச்சேரி காவல் சரகம் கருப்பூர் என்ற கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு பொங்கல் பண்டிகை கொண்டாட சென்றுள்ளார்.
அங்கு பொங்கல் சமைத்த அடுப்பில் இருந்த நெருப்புகளை ஒரு ஓரமாக அள்ளி வைத்துவிட்டு, பொங்கல் கொண்ட பண்டிகை கொண்டாடியுள்ளனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி வர்ஷித், எதிர்பாராத விதமாக நெருப்பில் விழுந்தார். இதில் உடலில் நெருப்பு காயம் ஏற்பட்டு சிறுமி அலறி துடித்தார்.
அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சில தினங்கள் சிகிச்சை பெற்று வந்த சிறுமி வர்ஷித், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கொரடாச்சேரி காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
