தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் 21ம் ஆண்டு பால்குடம்

தஞ்சாவூர், ஜன.24: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் 21ம் ஆண்டு பால்குட விழா நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை தஞ்சை அரண்மனை தேவஸ்தன கட்டுப்பாட்டில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உள்ளது. தஞ்சையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அரண்மனை தேவஸ்தான 88 திருக்கோயிலில் ஒன்றாகும். இந்த கோயிலில் தை வெள்ளியை முன்னிட்டு 21ம் ஆண்டு பால்குடம் விழா நேற்று நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்து இறுதியாக கோயிலை சென்றடைந்தனர். பக்தர்கள் எடுத்து வந்த பால் குடங்கள் அனைத்தும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்சிலே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் ரவி, செயல் அலுவலர் சத்யராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

 

Related Stories: