அறந்தாங்கி, ஜன.24: அறந்தாங்கி அருகே பெருநாவலூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அன்பழகன் தலைமை வகித்தார். வாக்காளர் உறுதிமொழி மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம். நம்முடைய நலம் கருதும் மரபுகளையும். சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம்.
மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றி வாக்களிப்போம் என கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பழனித்துரை, உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
