இலுப்பூர் அருகே வரும் 12ம்தேதி தென்னலூரில் ஜல்லிக்கட்டு

இலுப்பூர், ஜன.24: இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூர் என்ற தென்னலூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வரும் பிப்ரவரி 12ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூர் என்ற தென்னலூரில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.

இக்கோயில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் புகழ்மிக்க அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்,போல் புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூர் என்ற தென்னலூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு இப்பகுதியில் மிகவும் புகழ்மிக்கது.

புகழ்மிக்க இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட முகூர்த்தக்கால் வாடிவாசல் அருகே நடப்பட்டது. இதில் கோயில் நிர்வாகத்தினர், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: