அரியலூர் மாவட்டம் அயன்ஆத்தூர்- தேளூர் நெடுஞ்சாலை பணிகள் தீவிரம்

அரியலூர், ஜன.24: அரியலூர் மாவட்டம் அயன்ஆத்தூர்- தேளூர் நெடுஞ்சாலை பணி தீவிரமாக நடைபெற்றும் வரும் நிலையில் உறுதித்தன்மை பரிசோதனையை நெடுஞ்சாலை இயக்குனர் ஆய்வு செய்தார். அரியலூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டக கட்டுப்பாட்டிலுள்ள மாவட்ட முக்கிய சாலையான அரியலூர் அயன் ஆத்தூர் குடிசல் தேளூர் சாலையில் அரியலூர் புறவழிச்சாலை முதல் கல்லங்குறிச்சி வரை உள்ள பகுதியில் அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்ட சாலை பகுதிகளை இயக்குனர் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் சரவணன் ஆய்வு மேற்கொண்டு சாலையின் உறுதித்தன்மை பரிசோதனை ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து சாலையோரத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். இந்த ஆய்வின் போது விழுப்புரம் கோட்ட நெடுஞ்சாலை கட்டுமான பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர், அரியலூர் கோட்ட நெடுஞ்சாலை கட்டுமான பராமரிப்பு பொறியாளர் , உதவி கோட்ட பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

 

Related Stories: