ஜெயங்கொண்டம் ஒன்றியம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

ஜெயங்கொண்டம், ஜன.24: ஜெயங்கொண்டம் ஒன்றியம் அரசுப்பள்ளியில் பயிலும் 272 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை எம்எல்ஏ வழங்கினார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம், கங்கைகொண்டசோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில்,விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் கீழ், கங்கைகொண்டசோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, உட்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, அய்யப்பநாயக்கன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் மேல்நிலை முதலாமாண்டு பயிலும் 272 மாணவ, மாணவிகளுக்கு, ரூ.12.81 லட்சம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி ,மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சௌந்தபாண்டியன், ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் மணிமாறன், தலைமை ஆசிரியர்கள் மதிவாணன் கங்கைகொண்டசோழபுரம், தமிழ்ச்செல்வன் அய்யப்பநாயக்கன்பேட்டை, மணிவண்ணன் உட்கோட்டை மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கிராம கல்வி குழு நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

Related Stories: