ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

ஜெயங்கொண்டம் ஜன.24: ஜெயங்கொண்டத்தில் அரசு கல்லூரியில் தேசிய வாக்காளர் தினம் உறுதியேற்பு நிகழ்ச்சியுல் மாணவர்கள் பங்கேற்றனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிற்கு இணங்க, கல்லூரிக் கல்வி ஆணையர் ஆணையின்படி நேற்று 23 ம் தேதி காலை 11.00 மணியளவில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாக அனுசரிக்கப்படுவதால், கல்லூரி மாணவர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அவ்வமயம் அந்தந்த துறை மாணவர்கள் வகுப்புகளிலேயே வாக்காளர் உறுதிமொழியை வாசிக்க மாணவ-மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

 

Related Stories: