சீர்காழி, ஜன. 24: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர் நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தரங்கம்பாடி சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர்.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் சுரேஷ் மனுக்களை பரிசினை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் .கூட்டத்தில் டாக்டர் அறிவழகன் மற்றும் அனைத்து துறை அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
