தரங்கம்பாடி, ஜன. 24: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மற்றும் பொறையார் பகுதிகளில் நேற்று மதியம் திடீரென சாரல் மழை பெய்தது. இதனால் வானிலை குளிர்ச்சியாக இருந்தது. மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் தொடந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சம்பா அறுவடை நடப்பதால் பெரிய அளவில் மழை வராமல் இருக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்பாக உள்ளது.
