குடியரசு தின கிராம சபை அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும்

நாகப்பட்டினம், ஜன.24: நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 193 கிராம ஊராட்சிகள் வரும் 26 ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வரும் 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை கிராம சபை பார்வைக்கு ஒப்புதல் பெறுதல்.

தூய்மையான குடிநீர் விநியோகத்திற்கான உறுதி செய்வது குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்க திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், தொகுதி மேம்பாட்டு திட்டம், ஜல்ஜீவன் திட்டம், உங்க கனவை சொல்லுங்க திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு குறித்த விவாதங்கள் நடைபெறும். இக்கிராம சபா கூட்டத்தில் zனைத்து பொதுமக்கள், கிராமத்தை சார்ந்த அரசு அலுவலர்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: