நாகர்கோவில் அருகே புதைக்கப்பட்டது ஆதரவற்றவரின் எலும்புக்கூடா? புத்தாடை, சென்ட் பாட்டிலால் சந்தேகம்

நாகர்கோவில், ஜன.29: நாகர்கோவில் அருகே காலிமனையில் புதைக்கப்பட்டது ஆதரவற்றவரின் உடலாக இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. நாகர்கோவில் என்.ஜி.ஓ காலனி கணபதிநகர் அருகே சுடுகாடு உள்ளது.  இதன் அருகில் காலிமனை உள்ளது. இங்கு  நேற்று மாலை வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடியபோது, ஒரு பள்ளத்தில் எலும்புக்கூடு பாதி வெளியே தெரிந்த நிலையில் கிடந்தது. இதனையடுத்து சுசீந்திரம் போலீசார் மீட்டு  ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

 தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட உடல் என்றால், இப்படி சாலையோரம் புதைக்க வாய்ப்பில்லை. இதனை விட அடர்ந்த காட்டுப்பகுதி அருகில் உள்ளது. எனவே அங்கு கொண்டு சென்ற புதைத்திருக்கலாம். மேலும் எலும்புக்கூட்டில் இருந்த வேட்டி சட்டை புதியது. கொலை செய்தவர்கள் இப்படி புதிய உடையை போட்டு செல்ல வாய்ப்பில்லை. எனவே யாராவது ஆதரவற்ற முதியவராக இருக்கலாம். இறந்து போனதும், அக்கம்பக்கத்தினர் புதிய உடை சென்ட் பாட்டில்  வாங்கிதந்து புதைக்க கூறியிருக்கலாம். ஆனால், ஆழமாக பள்ளம் தோண்டாமல், சிறியதாக பள்ளம் தோண்டப்பட்டதால், எலும்புக்கூடு வெளியே தெரிந்திருக்கிறது. எனினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் கூறினர்.

Related Stories: