சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி குடு குடுப்பை அடித்து நூதன போராட்டம்

திருச்சுழி, ஜன.29: திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையாக சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்டோர் குடுகுடுப்பை அடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். திருச்சுழியைச் சுற்றிலும் சுமார் 300க்கும் மேற்பட்ட குறிசொல்லும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு முறையான சாதிச்சான்று இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 5 நபர்களுக்கு மட்டுமே காட்டுநாயக்கர் என்ற சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதால், மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதனால் மேற்படிப்பைத் தொடர முடியாமலும், பணிக்கு செல்ல முடியாமலும் இப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தங்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு காட்டுநாயக்கர் என்ற உரிய சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் முறையில் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடுகுடுப்பை அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதையடுத்து அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 15 நாட்களுக்குள் தங்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும்,

இல்லையெனில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த இருப்பதாக கூறி கலைந்து சென்றனர். இந்த நூதன போராட்டத்தால் திருச்சுழியில் சில மணி ேநரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: