ராமநாதபுரம், ஜன.24: திருஉத்தரகோசமங்கை வராஹி அம்மன் கோயிலில் வசந்த பஞ்சமி விழா கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் உள்ள சுயம்பு மகா வராஹி அம்மன் கோயிலில் வளர்பிறையில் வரக்கூடிய வசந்த பஞ்சமி பிரசித்திப் பெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு மஞ்சள், பால், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, குங்குமம், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பழங்கள், கிழங்குகள் படைக்கப்பட்டு சிறப்பு மகா தீப ஆராதனை நடந்தது. பெண்கள் அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு காப்பிட்டு வழிபட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் வெண் பூசணி, உடைத்த தேங்காய், எலுமிச்சை, அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டனர். மேலும் சிறப்பு வாய்ந்த வசந்த பஞ்சமி என்பதால் காலை முதல் இரவு வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. திரு உத்தரகோசமங்கை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வசந்த பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
- அம்மன்
- வசந்த பஞ்சமி
- ராமநாதபுரம்
- வசந்த பஞ்சமி விழா
- திருஉத்தரகோசமங்கை வாராஹி அம்மன் கோவில்
- வளர்பிராய
- சுயம்பு மகா வாராஹி அம்மன் கோவில்
- திருவுடையார்கோசமங்கை
