சங்கரன்கோவிலில் 6 கிராம விவசாயிகளின் நலன்கருதி தனி மின்வழித்தடம் அமைக்கும் பணி தொடக்கம்

சங்கரன்கோவில்,ஜன.24: சங்கரன்கோவில் துணை மின்நிலையத்திலிருந்து புளியம்பட்டி, அச்சம்பட்டி, கண்டிகைப்பேரி, வாடிக்கோட்டை, பெரியூர், மணலூர் ஆகிய பகுதியில் விவசாயத்திற்கு தனி மின்வழித்தடம் நிறுவும் பணிகளுக்கான பூமி பூஜை புளியம்பட்டி கிராமத்தில் வைத்து நடந்தது. சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய நிதிப்பங்களிப்புடன் புதுப்பிக்கத்தக்க பகிர்மான மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதோடு, விவசாய நிலங்களில் பயன்படாத குறைந்த இடங்களில் சோலார் பேனல் நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.விவசாயத்திற்கு பயன்படும் மின்சாரத்தை தவிர்த்து கூடுதலாக பெறும் மின்சாரத்துக்கு விவசாயிகளுக்கு வருமானம் தரும் வகையில் இத்திட்டம் வகுக்கப்படுகிறது. இதன் மூலம் மின் இழப்பீடு வெகுவாக குறைக்கப்படுவதால் அரசின் செலவினங்கள் குறைவாக இருப்பதால் அரசு இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது விவசாயத்திற்கு தடையற்ற மும்முனை வழங்க உறுதிசெய்துள்ளது. நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் நகர் பகுதி பூபேஸ் ராஜ்மோகன், கிராம பகுதி தங்கராஜ், சங்கரன்கோவில் நகர் உதவி மின்பொறியாளர் கருப்பசாமி, நகர்-2 பிரிவு கணேச ராமகிருஷ்ணன், கிராம பிரிவு ராஜலிங்கம், பண்டக பொறுப்பாளர் நடராஜன், ஒப்பந்ததாரர் கந்தசாமி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: