திருப்புடைமருதூர் நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

பாப்பாக்குடி, ஜன.24: நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூரில் தாமிரபரணி நதிக்கரையில் பிரசித்தி பெற்ற கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றதுடன் தொடங்கியது. இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாள் வீதி உலா, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெறவுள்ளது. விழாவின் 9ம் நாளான வரும் 31ம் தேதி காலை 10 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. இரவில் புஷ்ப பல்லக்கில் சுவாமி அம்பாள் எழுந்தருளல், இரவில் ஆன்மிக நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் ஆகியவை நடைபெறுகிறது.

தைப்பூச திருவிழாவான பிப்.1ம் தேதி பகல் 1.15 மணியளவில் ரிஷப லக்கனத்தில் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதில் நெல்ைல, தூத்துக்குடி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி தரிசனம் செய்கின்றனர். தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகளும், இரவில் தெப்ப உற்சவம் ஆகியவை நடைபெறவுள்ளது. மறுநாள் 11ம் திருநாளன்று காலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா, இரவில் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா, பைரவர் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: