அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

பழநி, ஜன.23: பழநி அருகே ஆயக்குடியில், அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழநி அருகே ஆயக்குடி மாப்பிள்ளை நாயக்கன் குளத்தின் பாசன நிலங்களுக்காக வரதமாநதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டுமென வலியுறுத்தி பழநி-சட்டப்பாறை சாலையில் நேற்று விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த நீர்வளத்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

Related Stories: