தவெகவில் கதறி அழும் செங்ஸ்: மாஜி எம்.பி கிண்டல்

கோவை:தவெக உயர்மட்ட மாநில குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள செங்கோட்டையனுக்கு, அக்கட்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பதால் மாற்றுக்கட்சிக்கு அவர் தாவலாம் என்கிற பரபரப்பான தகவல் வெளியானது. இந்நிலையில், கோவையை சேர்ந்த முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தனது முகநூல் பக்கத்தில் செங்கோட்டையன் குறித்து பதிவிட்டுள்ளதாவது: சுறுசுறுப்பா இருந்த செங்கோட்டையனே முடங்கிட்டார். அவரது அரசியல் செயல்பாடுகளும், சுதந்திரமும் முடக்கப்படுகிறது.

ஆனந்த், ஆதவ், அதற்கு பின் செங்கோட்டையன் என முன்னிலையில் இருந்து ஒருபடி நிலை இறக்கப்பட்டு இருக்கிறார். இதை முன்னரே சொல்லி இருந்தால் அவர் அங்கு சென்றிருக்கமாட்டார். தற்போது செங்கோட்டையன் கதறி கதறி அழுவதை பார்த்து, மற்றவர்கள் பனையூர் செல்ல யோசிக்கின்றனர். இதனால்தான் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: