நெடுவயல் ஊராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

கடையநல்லூர், ஜன.23: கடையநல்லூர் மேற்கு ஒன்றியம் நெடுவயல் ஊராட்சியில் இல்லம் தேடி இளைஞர்களை நோக்கி என்ற தலைப்பில் திமுக மாநில துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி.பிறந்த நாளை முன்னிட்டு வழக்கறிஞர் காசிராஜன் ஏற்பாட்டில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை, மாநில விவசாய அணி இணை செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேக்தாவூத், ஒன்றிய செயலாளர் சுரேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் சிங்கிலிபட்டி மணிகண்டன், பகவதியப்பன், இளைஞரணி ராஜ்குமார், துரை. சந்திரசேகர், அப்பு, கிளை செயலாளர்கள் தங்கம், கணேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: