சென்னையில் ஜிஎஸ்டி இ-வே பில்லிங் மற்றும் வருமான வரி அறிக்கை சமர்ப்பித்தல் குறித்த பயிற்சி 3 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு

 

சென்னை: சென்னையில் ஜிஎஸ்டி இ-வே பில்லிங் மற்றும் வருமான வரி அறிக்கை சமர்ப்பித்தல் குறித்த பயிற்சி 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் – ஜிஎஸ்டி இ-வே பில்லிங் மற்றும் வருமான வரி அறிக்கை சமர்ப்பித்தல் குறித்த பயிற்சி வரும் ஜனவரி 28,29,30ஆகிய தேதிகளில் காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் ஜிஎஸ்டி அறிமுகம், ஜிஎஸ்டி கூறுகள், ஜிஎஸ்டி பதிவு செயல்முறை, ஜிஎஸ்டி விலைப்பட்டியல் மற்றும் பில்லிங் ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செயல்முறை, உள்ளீட்டு வரி கடன் (ஐடிசி), உள்ளீட்டு வரி கடன் (ஐடிசி), ஜிஎஸ்டி தணிக்கைகள் மற்றும் மதிப்பீடுகள், ஜிஎஸ்டி இணக்கம் மற்றும் அபராதங்கள்,

பொதுவான சவால்கள் மற்றும் ஜிஎஸ்டியில் தீர்வுகள், அறிமுகங்கள் வருமான வரி, வருமான வரி கட்டமைப்பு மற்றும் அடுக்குகள், வருமான வரியின் கீழ் வருமான வகைகள், ஐடிஆர் படிவங்கள் அறிமுகம், வருமான வரி விலக்குகள் மற்றும் விலக்குகள், டிடிஎஸ் (மூலத்தில் வரி கழிக்கப்பட்டது), வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான படிப்படியான செயல்முறை, முன்கூட்டிய வரி மற்றும் சுய மதிப்பீட்டு வரி, வருமான வரி அறிவிப்புகள் மற்றும் ஆய்வு, பொதுவான தவறுகளில் தாக்கல் மற்றும் எப்படித் தவிர்ப்பது, அவற்றை, வருமான வரித் திருப்பிச் செலுத்தும் செயல்முறை, வரி திட்டமிடல் உத்திகள், கேள்வி பதில் பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை– 600 032. 8668102600 8754495254, www.editn.in. முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

Related Stories: