ஸ்வெலெக்ட் எனர்ஜி நிறுவனம்: எரிசக்தி துறையில் புதிய அடையாளம்

 

சென்னை: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முன்னணி நிறுவனமான ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட் (BSE: 532051 | NSE: SWELECTES), (முன்னர் நியூமெரிக் பவர் சிஸ்டம்ஸ் லிமிடெட் என்று அறியப்பட்டது), தனது புதிய கார்ப்பரேட் லோகோ மற்றும் ‘உலகிற்குப் பொறுப்புடன் ஆற்றல் அளித்தல்’ (Powering the World Responsibly) என்ற பிராண்டின் முழக்க வாசகத்தை இன்று வெளியிட்டது. பரிணாம வளர்ச்சியிலும், தூய்மையான மற்றும் நம்பகமான ஆற்றல் தீர்வுகளின் மீதும் இந்நிறுவனம் கொண்டிருக்கும் நீண்டகால உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கிய படிநிலையாகும்.

மேலும், ‘நியூமர்ஜி’ என்ற புதிய தயாரிப்புகளின் தொகுப்பையும் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியது. இது வீடுகள், சிறு அலுவலகங்கள் (SOHO) மற்றும் பெரிய அளவிலான வணிக மற்றும் தொழில்துறை (C&I) பயன்பாடுகளுக்குத் தேவையான, நம்பகமான, 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் (BESS) மற்றும் வீடுகளுக்கான விரிவான ஆற்றல் தீர்வுகளை உள்ளடக்கியது.

புதிய பிராண்ட் அடையாளம் குறித்து ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் அதன் துணைத் தலைவருமான திரு. ரா . செல்லப்பன் பேசுகையில், “எங்களின் புதிய அடையாளம் நாங்கள் எவ்வளவு தூரம் கடந்து முன்னேறி வந்திருக்கிறோம் மற்றும், எந்த இலக்கை நோக்கி செல்கிறோம் என்பதைப் பிரதிபலிக்கிறது. ‘நியூமெரிக்’ பிராண்டின் மூலம் நம்பகமான மின் தீர்வுகளை உருவாக்கி வழங்கியதிலிருந்து, ‘ஸ்வெலெக்ட்’ மூலம் தூய்மையான எரிசக்தியில் கவனம் செலுத்துவது வரை, எங்களின் அடிப்படை விழுமியங்களான நம்பகத்தன்மை, பொறுப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவை மாறாமல் உள்ளன. வளர்ச்சியும் நிலைத்தன்மையும் கைகோர்த்து ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையை ‘Powering the World Responsibly’ என்ற எமது புதிய முழக்க வாசகம் சரியாகப் பிரதிபலிக்கிறது,” என்றார்.

இந்தப் புதுப்பிக்கப்பட்ட அடையாளம், இன்றைய காலகட்டத்தில் ஸ்வெலெக்ட் எந்த குறிக்கோளை முன்னிலைப்படுத்துகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. வலுவான பொறியியல் மதிப்பீடுகளை தனது அடித்தளமாகக் கொண்ட ஒரு நிறுவனமாக, வீடுகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுக்குப் பொறுப்பான, நிலையான எரிசக்தி தீர்வுகளை வழங்குவதில் இந்நிறுவனம் இப்போது கவனம் செலுத்துகிறது. சோலார் (சூரியஒளி மின்சக்தி), ஆற்றல் சேமிப்பு சாதனங்கள் மற்றும் ஒருங்கிணைந்த எரிசக்தித் தீர்வுகளில் இந்நிறுவனம் தனது இருப்பை வலுப்படுத்தி வரும் நிலையில், புதிய லோகோ மற்றும் முழக்க வாசகம் ஆகியவை அது பயணிக்கவிருக்கும் ஒரு திசையை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.

ஸ்வெலெக்டின் பயணம், இந்தியாவின் பவர் எலக்ட்ரானிக்ஸ் துறையில் நம்பகத்தன்மைக்கு மறுபெயராகத் திகழ்ந்த ‘நியூமெரிக் பவர் சிஸ்டம்ஸ் லிமிடெட்டின்’ பாரம்பரியத்துடன் ஆழமாக இணைந்திருக்கிறது. பல தசாப்தங்களாக, 99.9999% நம்பகத்தன்மையுடன் யுபிஎஸ் (UPS) சாதனங்களுக்கான தரஅளவுகோலை நியூமெரிக் நிர்ணயித்தது. பொறியியல் செயல்பாட்டில் நிபுணத்துவமும், மற்றும் வாடிக்கையாளர் கொண்டிருக்கும் ஆழமான நம்பிக்கையும் இன்றும் ஸ்வெலெக்ட் நிறுவன அணுகுமுறையின் முதுகெலும்பாகத் திகழ்கின்றன.

இந்த நெறிமுறைகளுக்கு ஏற்ப, ஸ்வெலெக்டின் ‘நியூமர்ஜி’ தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வீடுகள், சிறு வணிகங்கள் மற்றும் பெரிய வணிக மற்றும் தொழில்துறை பயனர்களின் மின்சார தேவைகளை எதிர்கொள்வதற்கென உருவாக்கப்பட்டுள்ளது; குடியிருப்புகள் முதல் பெருநிறுவனங்களுக்கான பயன்பாடுகள் வரை தடையின்றி மின்சார தேவைகளை நேர்த்தியாக பூர்த்தி செய்யும் தீர்வுகளை இது வழங்குகிறது.

நியூமர்ஜி தயாரிப்புகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தி, ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருள்குமார் சண்முகசுந்தரம் பேசுகையில், “நம்பகமான மற்றும் உறுதியான மின்சக்தியின் எதிர்காலத்திற்கு பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் (BESS) மைய அம்சமாக உள்ளன. மின் நுகர்வு முறைகள் மாறுவதாலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாடு அதிகரிப்பதாலும், 24 மணி நேர மின்சாரம், மின்கட்டமைப்பின் (Grid) நிலைத்தன்மை மற்றும் எரிசக்தி தன்னிச்சையை உறுதி செய்வதில் ‘ஆற்றல், சேமிப்பு’ முக்கியப் பங்கு வகிக்கும். நியூமர்ஜி மூலம், வீடுகள், வணிகங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களில் இந்தத் தேவைகளை ஸ்வெலெக்ட் பூர்த்தி செய்கிறது,” என்றார்.

நியூமர்ஜி தொகுப்பில் உள்ளவை:
நியூமர்ஜி ஹோம்: 1 – 10 kW – வீடுகள் மற்றும் சிறு அலுவலகங்கள்/வீட்டு அலுவலகங்களுக்காக (SOHO) வடிவமைக்கப்பட்ட முழுமையான ஆற்றல் தீர்வுகள்.

நியூமர்ஜி ஹைப்ரிட்: 5 – 20 kW – அதிக நுகர்வு கொண்ட வீடுகள் மற்றும் சிறிய வணிக நிறுவனங்களுக்கு ஏற்ற மேம்பட்ட ஹைப்ரிட் ஆற்றல் சாதனங்கள். இவை கூடுதல் திறனையும் மற்றும் நெகிழ்வுத்தன்மையையும் அதிக ஆற்றல் தேவைப்பாடுள்ள அமைவிடங்களுக்கு வழங்குகிறது.

நியூமர்ஜி ஹெச்.பி: 3 – 50 kW – வலுவான ஆற்றல் சேமிப்பு உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன மின்கட்டமைப்புடன் ஒருங்கிணைப்பு திறன்கள் தேவைப்படும் வணிக மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் (BESS).

ஸ்வெலெக்டின் நியூமர்ஜி ஹோம் மற்றும் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் (BESS) ஆகியவை சூரிய சக்தி (சோலார்) அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்தவும், 24 மணி நேரமும் நம்பகத்தன்மையுடன் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துதல்: சூரிய ஒளியிலிருந்து பகலில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் திறம்பட சேமிக்கப்பட்டு தேவைப்படும்போது பயன்படுத்தப்படுகிறது. இது மின்கட்டமைப்பை சார்ந்திருப்பதைக் குறைத்து ஒட்டுமொத்த ஆற்றல் செயல்திறனை மேம்படுத்துகிறது.

மின்கட்டமைப்புடன் ஒருங்கிணைப்பு மற்றும் உச்சக்கட்டத் தேவை மேலாண்மை: மேம்பட்ட ஆற்றல் மேலாண்மை தொழில்நுட்பம், உபரியாக உள்ள புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைச் சேமித்து, அதிக தேவை உள்ள நேரங்களில் வழங்குகிறது. இது மின் விரயத்தைக் குறைத்து பொருளாதார ரீதியாகப் பயனளிக்கிறது. குறைந்த திட்டச் செலவுகள்: நுண்ணறிவுமிக்க ஆற்றல் மேலாண்மை, உச்சக்கட்டத் தேவைக் கட்டணங்களைக் குறைப்பதன் மூலம் மின்சாரச் செலவைக் குறைக்க உதவுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகப்படுத்துதல்: உபரி மின்சாரம் வீணடிக்கப்படாமல் சேமிக்கப்படுவதால், நிறுவப்பட்ட சோலார் திறனை முழுமையாகப் பயன்படுத்த முடிகிறது மற்றும் ஒட்டுமொத்த திட்ட செயல்திறனை மேம்படுத்துகிறது. நம்பகமான மின் விநியோகம்: மின்வெட்டு அல்லது அதிக சுமை உள்ள நேரங்களிலும் தடையற்ற மின்சாரம் கிடைப்பதை ஒருங்கிணைந்த சேமிப்பு அமைப்பு உறுதி செய்கிறது.

“பேட்டரி சேமிப்பு சாதனங்களில், நியூமெரிக்கின் வலுவான அனுபவம் மற்றும் ஸ்வெலெக்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள நியூமர்ஜி, இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கு ஆதரவளிப்பதில் எங்களை ஒரு முன்னணி நிறுவனமாக நிலைநிறுத்துகிறது,” என்று சண்முகசுந்தரம் மேலும் கூறினார். இந்தத் தீர்வுகள் ஸ்வெலெக்டின் சோலார் மற்றும் பேட்டரி நிபுணத்துவத்தை ஒன்றிணைத்து வாடிக்கையாளர்களுக்குத் தனித்துவமான மதிப்பை வழங்குகின்றன.

Related Stories: